TCT சுப்பர்மார்க்கட்டில் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்தவர் மீண்டும் கடைக்குள் இறங்கி 18 இலட்சம் ரூபாவை களவாடிச் சென்றவர் தலைமறைவு.
யாழில் அமைந்துள்ள TCT சுப்பர்மார்க்கட்டில் கோடிக்கணக்கில் பணத்தை சூறையாடி பணியில் இருந்து விலத்திய நபரால் மீண்டும் TCT சுப்பர்மார்க்கட்டுக்குள் நுழைந்து 18 இலட்சம் ரூபாவை தந்திரமாக களவாடிச் சென்றவரை வலை வீசும் பொலிஸார்.
இரு மாதத்திற்குள் இரு சம்பவங்களும் நடந்து முடிந்துள்ளது.
கணக்குப் பிரிவில் பணியாற்றிய இவர் கடந்த ஒரு வருட காலமாக பணத்தை கையாடல் செய்து வந்துள்ளார். TCT சுப்பர்மார்க்கட்டின் நிர்வாகம் அவரின் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்திருந்ததால் பணம் கையாடல் செய்யப்படுவதை கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கார்த்திகை மாதம் நிர்வாகம் கணக்காய்வு செய்த போது இவரின் பண கையாடல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் பணத்தை கையாடல் செய்துள்ளார். கையாடல் செய்த பணம் ஒரு கோடியைத் தாண்டியது. உடனடியாக அவரை பணியில் இருந்து விலத்தினர். அதன் பின்னர் கடந்த வாரம் அதிகாலை வேளை TCT க்குள் நுழைந்து 18 இலட்சம் ரூபாவை களவாடிச் சென்றுள்ளார். உடனடியாகயாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு பணத்தை கையாடல் செய்து அப்படி என்னதான் செய்தார் என்று நிர்வாகத்தால் விசாரணை செய்த போது இவர் போதைக்கு அடிமையானவர்
என்பது பின்னர்தான் TCT நிர்வாகத்துக்கு தெரியவந்துள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தை மக்களுக்கு மட்டுமல்ல நகர அபிவிருத்திக்கும் வழங்கி வரும் தியாகி அறக்கொடை நிலையத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நிர்வாகம் விசனம் கொண்டுள்ளது. வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஒருவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.