முல்லைத்தீவு – புதுக்குடியிருப் பகுதியில் இரு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றிற்குள் ஓட்டினை பிரித்து உள் நுளைந்த கொள்ளையர்கள் மூவர்
கத்தியினை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள்.
இதன்போது பெறுமதியான மூன்று தொலைபேசிகள், நான்கு பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.ரி.எம். அட்டைகள், கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள்,
வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த மதுபான போத்தல்கள் உள்ளடங்கலான 692,000/- பெறுதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
வீட்டில் இருந்தவர்கள் அண்மையில் தான் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டில் சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டபோதும் கமாரக்கள் சில அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், ஒளிப்பதிவு சேமிக்கும் காட்டிஸ்கையும்,
கருவியினையும் திருடர்கள் திருடிசென்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேபோல் கைவேலி 2 ஆம் வட்டாரப்பகுதியில் வீடு ஒன்றில் வீட்டிற்குள் நுளைந்த நபர்கள் வீட்டில் அனைவரும் ஆழ்த உறகத்கதில் இருந்த நிலையில்
வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்து 20 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றம் 5 ஆயிரம் ரூபா பணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று(21) அதிகாலை 4.30 மணிக்கும் இடையில் பதிவாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்,
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.