யாழ்.காங்கேசன்துறை – கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையார் சிலை காணாமல்போன நிலையில் மேலும் சில இடங்களில் பிள்ளையார் சிலைகள் காணாமல்போயுள்ளது.
இதன்படி மகாஜனா பாடசாலைக்கு அருகில் உள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும், பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலிருந்து ஒரு பிள்ளையார் சிலையும் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்வம் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.