
கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் நேற்று (23-12-2021) எரிவாயு (காஸ்) அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்



கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் நேற்று காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் குறித்து அடுப்புவெடித்துள்ளதாக முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் குறித்த வெடிப்பு சம்பவத்தில் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென்பது குறிப்பிட் த்தக்கது .