மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) உலருணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.




வடமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 2000 மீனவ குடும்பங்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகிறது.
18 கிலோ எடை கொண்ட பொதியில் அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு அடங்கிய உணவு பொதி தலா 1600 ரூபா பெறுமதியானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் கிளிநொச்சி இணைமாதா நகர், வேரவில், பள்ளிக்குடா பகுதியல் 150 குடும்பங்களிற்கு குறித்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலகம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தத்தது.