
குறித்த சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவனை பாடசாலையில் தரம் 7 இல் சேர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிபர் 200,000 ரூபா இலஞ்சம் கேட்டதாக மாணவனின் பாதுகாவலர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தேக நபரான அதிபரை குறித்த பணத் தொகையை பெற்றுக் கொள்ளும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிபர் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
.சம்பவம் தொடர்பில் இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.