
முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற 12 வயது சிறுமியின் மரணம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கடந்த 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட குறித்த சிறுமியின் சகோதரியின் கணவரை அடுத்த மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.