பாலியல் ரீதியான தொந்தரவுகளை அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக,... Read more »

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார், ஐக்கிய நாடுகளின்... Read more »

சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் அடுத்த வருடம் முதல் சட்டக் கல்வி – நீதி அமைச்சர் விஜேதாச!

சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு , அடுத்த வருடம் முதல் சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் சட்டக் கல்வியையும் உள்ளடக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ... Read more »

ரணில் விக்கிரமசிங்க இன்று கதைப்பதை நாளை மாறி செயற்படுவார்….! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ரணில் விக்கிரமசிங்க இன்று கதைப்பதை நாளை மாறி செயற்படுவார் என யாழ் மாவட்தய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி, மற்றும்  கந்தரோடையார் ஒழுங்கை... Read more »

பளை‌ இத்தாவில் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது !

பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது  910கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டும் நல்ல... Read more »

பெண்கள் உரிமைகளுக்காக தாமாகவே குரல் கொடுக்கும் பெண்கள் குழு உருவாக்கம்…..!

பெண்கள் உரிமைகளுக்காக தாமாகவே குரல் கொடுக்கும் வகையில் வடக்கு மாகாண பெண்கள் குழு உருவாக்கம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பமாக, பிரதேச செயலக பிரிவுகளில் பெண்கள் குழுக்களை ஆரம்பிக்கும்... Read more »

கிளிநொச்சி வளாகத்தில் கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  குறித்த... Read more »

கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து.

கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நீர்வேலி, பூதர்மடம் பகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு சென்று கொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி இந்த விபத்து... Read more »

அம்பன் மருத்துவமனையில் மருத்துவரும் இல்லை, நோயாளர் காவு வண்டியுமில்லை, ஒருமணித்தியாலம் வரை காத்திருந்த அவசர நோயாளி……..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் மருத்துவரும்  இல்லாத நிலையில், நோயாளர்  காவு வண்டியும் இல்லாத நிலையில் அவசரமாக சிகிச்சையளிக்கப்படவேண்டிய  நோயாளி ஒருவர் ஒரிமணித்தியாலத்தின் பின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருதங்கேணி பிரதேச வைத்திய சாலை நோயாளர் காவு வண்டி... Read more »