உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ்,... Read more »
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டியுள்ள நிலையில், மார்ச் 19ம் திகதி வரை உக்ரைன் தரப்பில் 902 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1459 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தால் புதைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட... Read more »
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ரஸ்யாவின் மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை என்று அவர் இஸ்ரேலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இணையத்தின் ஊடாக உரையாற்றிய அவர், உலகிலேயே சிறந்த வான் பாதுகாப்பை இஸ்ரேல்... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். முன்னால் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்லவதற்கு முயற்சித்தபோது பின்னால் சென்ற தனியார் பேருந்து முந்தி செல்ல... Read more »
யாழ்.மூளாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நியுகமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49)... Read more »
போர் காரணமாக மூடப்பட்டு பின்னர் செயலற்றுப்போன யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இரும்பு வியாபாரிகள் மொட்டையடித்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றய தினம் பார்வையிட்டுள்ளார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. மஹிந்த... Read more »
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப்... Read more »
நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களும், மாலை... Read more »
பால் தேநீரின் விலையை 100 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கோப்பை பால் தேநீர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு வருடத்துக்கு இந்த விலை அதிகரிப்பில் மாற்றம் இல்லை என்றும் அவர்... Read more »
இலங்கையில் இடம்பெறும் எந்த நிகழ்விலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள மாட்டார் எனத் திடமாகத் தெரிய வருகின்றது. கொழும்பில் இடம்பெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தருவார் எனவும் அதனை அடுத்து இம்மாதம் இறுதி தினத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தருவதாக சில தகவல்கள்... Read more »