தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று (07.03) குறித்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர். வவுனியா தெற்கு... Read more »
கிழக்கு லண்டனில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிட தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. Whitechapel High Street, in Aldgate East பகுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ... Read more »
கையடக்க தொலைபேசியை திருடியதாக, இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்ற... Read more »
பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் பல மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய தூதுவர்... Read more »
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச... Read more »
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகக் கருதக்கூடிய சிவலிங்கத் தளம் அல்லது கல்லை தொல்பொருள் திணைக்களம் மற்றும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நேற்று (07) கண்டுபிடித்துள்ளனர். பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் படி இந்த சிவலிங்கத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தின்... Read more »
“எந்த இலட்சியத்துக்காக எமது இளையோர்கள் கடந்தகாலத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பசுமைப் பூங்காவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட... Read more »
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இன்றும் 8 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 49ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், ஐ.நா முன்றலில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பல்வேறு... Read more »
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கிவ் அருகே உக்ரைன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, Hostomel மேயர் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். Hostomel நகரம் உக்ரேனிய... Read more »