அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (23) ஊடகங்களிடம் அவர்... Read more »

இரவோடு இரவாக அகற்றப்பட்ட ‘வெட்கக்கேட்டின் சின்னம்’ தூபி.

கொங்ஹொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற நினைவுத்தூபி அகற்றப்பட்டுள்ளது. 8 மீட்டர் உயரம் கொண்ட குறித்த செம்பு நினைவுத்தூபி இரவோடு இரவாக கட்டுமாணத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1989 ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள்,... Read more »

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் நேற்று அடையாளம்.

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் நேற்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு மலேரியாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. குறித்த... Read more »

தலைவர் பிரபாகரனால் பொன்சேகாவிற்கு கிடைத்த பிச்சை….சபா குகதாஸ்

தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களை தலைமை தாங்கியவர்களுக்கும் குறிப்பாக தலைவர், அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களுக்கும் படிப்பறிவு இல்லை என சீண்டல் தனமாக சரத் பொன்சேகா உளறியுள்ளார் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம்... Read more »

14 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றச்சாட்டின் சந்தேகநபர்

தலவாக்கலை பகுதியில் தனது மனைவியை பொல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு 14 வருடங்களாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குறித்த சந்தேகநபர், கடந்த 2007ஆம் ஆண்டு, தலவாக்கலை, வட்டகொடவத்த பிரதேசத்தில் தாம் வசித்து வந்த... Read more »

‘‘விடுதலைப்புலிகளின் காலத்தில் அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில்லை’’

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில்,... Read more »

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) உலருணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 2000 மீனவ குடும்பங்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகிறது. 18 கிலோ எடை கொண்ட பொதியில் அரிசி, மா, சீனி,... Read more »

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் எரிவாயு (காஸ்) அடுப்பு வெடிப்புச் சம்பவம்.

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் நேற்று (23-12-2021) எரிவாயு (காஸ்) அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்  கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் நேற்று காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் குறித்து அடுப்புவெடித்துள்ளதாக  முறைப்பாடு தெரிவித்ததை... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வுஇ

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான  தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வு நேற்று(23-12-2021) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மனித வலு  மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »

கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க நீதவான் பணிப்பு.

கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் நேற்று  பணித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகரை பணித்துள்ளார். Read more »