இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தை நேற்று கண்காணித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக வடமாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை முற்பகல்... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப் பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம்... Read more »
தமிழகத்தின் திருவெல்வேலி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். நெல்லை நகர்ப் பகுதியிலுள்ள பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப்பாடசாலையின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்துள்ளது. இந்த... Read more »
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். விநாயகபுரம் 4ம் பிரிவு கடற்கரை வீதியிலுள்ள வீடொன்றில் சம்பவ தினமான நேற்று எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த... Read more »
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சி அங்கத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்கள் என 32 பேருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்ந்த 2021,... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்கும் இடப்பரப்பு கோரி அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும் வாக்குவாதங்கள் முஸ்லிம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சட்ட அங்கீகார வர்த்தமானி பிரசுரம் மூலம் பிரகடனப்படுத்தப்படாத ஒரு பிரதேச செயலகமாகவுள்ள... Read more »
“எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பது தான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சிந்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு யாழ்ப்பாணம் மாநகர சபை பட்ஜட்டை மேயர் முன்வைத்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். பாடசாலையின் முதல்வர் கண்ணதாசனினால் பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும், மழைக்காலங்களில் மாணவர்கள் படும் அசௌகரியங்கள், நீர் வகுப்புக்களில் தேங்கி நிற்பது... Read more »
கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை... Read more »
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் கருத்தாய்வு ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கருத்தாய்வு எதிர்வரும் 18.12.2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக் கருத்தாய்வில்... Read more »