தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவருக்கு இழப்பீடு….! அனர்த்த முகாமைத்துவபிரிவு.!

தெல்லிப்பழையில் இன்று காலை மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை அனைத்து முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும்... Read more »

கரையோரப் பகுதிகளுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம்.

கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். Read more »

தனிப்பட்ட பகையே மினுவாங்கொட துப்பாக்கி சூட்டுக்கு காரணம்: பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பு.

கம்பஹா மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தனிப்பட்ட பகையே காரணம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கம்பஹா மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில், நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு... Read more »

சமூக பாதுகாப்பு வரி காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு – அசேல சம்பத்

சமூக பாதுகாப்பு வரி காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.... Read more »

2023 ஜூன் 3 ஆம் திகதி பிரிட்டன் மன்னரின் முடிசூட்டு விழா.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர்... Read more »

மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி! ஓடும் ரயிலில் கணவன் மீது வாள்வெட்டு, மனைவியிடம் கொள்ளை, ஒருவர் சிக்கினார்.. |

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுக்குள் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல் கணவனை வாளால் வெட்டிவிட்டு மனைவியை தாக்கி தங்க நகை மற்றும் லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) அதிகாலை நடந்துள்ளது.... Read more »

யாழ்.இருபாலையில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 73 வயது இளைஞன் கைது!

யாழ்.இருபாலையில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 73 வயதான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இருபாலையில் சைக்கிள் கடை நடாத்திவரும் 73 வயது இளைஞன் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த... Read more »

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை நேற்று 06/10/2022 நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்து கொண்டன. Read more »

வடக்கில் கருணா அம்மானால் உருவாக்கப்படவுள்ள படையணி….!

வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க அம்மான் படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

முல்லைத்தீவு அபகரிப்புக்கு எதிராக ஒன்றுதிரளுமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சி அழைப்பு….!

முல்லைத்தீவில் தமிழர் பகுதிகளை மகாவலி (L )வலயம் என்ற போர்வையில் குடிப் பரம்பலை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஒரு அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்தார்.... Read more »