முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுமா! வெளியாகியுள்ள தகவல்

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் வர்த்தகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக அமைச்சருக்கும், வியாபாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்றைய தினம்(28.09.2022) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போதே வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்... Read more »

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய பிரிவு

திட்டமிட்டு பரப்பப்படும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மை தன்மையை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதேவேளை,... Read more »

தந்தையை கொடூரமாக அடித்து கொலை செய்து தீ வைத்த மகன் – தாய் மீதும் தாக்குதல்

கொழும்பு- மாலபே, ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது... Read more »

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயங்களுக்கு விசேட வரி விதிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயங்களுக்கு விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 50 ரூபா விசேட பண்ட வரியாக நிதியமைச்சு விதித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விசேட பண்ட... Read more »

சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கியின் உச்சி மாநாடுகளுக்கு செல்லும் இலங்கை பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் 2022 ஆண்டுக்கான கூட்டங்கள், அக்டோபர் 10 திங்கள் முதல் அக்டோபர் 16 ஞாயிறு வரை நடைபெறவுள்ளன. இந்த கூட்டங்கள்,வோஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் தலைமையகங்களில் நடைபெறவுள்ளன. இந்நிலையில்... Read more »

கொழும்பில் பிரபல அமைச்சரின் மகன் உட்பட பலர் அதிரடியாக கைது

கொழும்பில் அடாவடித்தனம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடயில் வைத்து மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்... Read more »

மின்வெட்டு தொடர்பான முழு விபரங்கள்

இன்றைய தினம் (28) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில்... Read more »

கொழும்பில் திடீர் தீவிபத்தில் 80 வீடுகள் சேதம்! பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைப்பு

கொழும்பு – பாலத்துறை பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த தீப்பரவல் முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர், கொழும்பு மாநகரசபை... Read more »

அரச ஊழியர்களுக்கு நடைமுறையாகும் கடுமையான கட்டுப்பாடு

அரசாங்க ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் அலுவலக வளாகத்திற்கு வரும்போது அணிய வேண்டிய ஆடை குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்... Read more »

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

அரச உத்தியோகத்தர்கள் தாபன விதிக்கோவையை பின்பற்றாது சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். Read more »