பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கேகாலையிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கேகாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சர்வமதத் தலைவர்கள்... Read more »

மன்னார் மாவட்டத்தில் தொழிற் சந்தை.

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால், மன்னார் மாவட்டத்தில்  நேற்றைய தினம் காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. குறித்த தொழில் சந்தையானது நேற்று காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் போது பல தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »

பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு,

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,  பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று முன்தினம் (20.09.2022) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு... Read more »

கோனேஸ்வரத்தின் புனிதத்தன்மையை இல்லாமல் செய்ய முயற்சி.

கோனேஸ்வரத்தின் புனிதத்தன்மையை இல்லாமல் செய்வதற்கான முழுமையான முயற்சி எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று 21/09/2022 பாராளுமன்றத்தில் 21.09 உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சிகைகளுக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாரதார வளர்ச்சி என்பது ஒரு... Read more »

டிசெம்பர் 31ஆம் திகதியாகும்போது வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஓய்வுபெற்று செல்லவுள்ளனர்-எதிர்க் கட்சித் தலைவர்

வருட இறுதியில், டிசெம்பர் 31ஆம் திகதியாகும்போது வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஓய்வுபெற்று செல்லவுள்ளனர் என்றும் இது வைத்தியத்துறையில் வீழ்ச்சிக்கு காரணமாக அமையக்கூடிய விடயமென்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று 21/09/2022 பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை... Read more »

காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழக... Read more »

யாழில் தாயின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு... Read more »

குருந்தூர் மலையில் ஆர்ப்பாட்டம் – ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது.

குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்து  நேற்றைய தினம் (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும், காணி... Read more »

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கை அதிகாரிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் 16ம் திகதி நடைபெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு நீண்ட கால முதலீடுகள் மூலம் ஆதரவளிக்கத்... Read more »

குழந்தைகள் உட்பட 12 இலங்கை தமிழர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற 12 பேரை  இந்திய கடலோர காவல் படையினரால் மீட்டுள்ளனர். தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை பத்திரமாக மீட்ட... Read more »