மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

மகளை கொடூரமான முறையில் தாக்கிய தந்தை ஒருவரை காலி துறைமுகம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். காலி- கட்டுகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் 16 வயதான மாணவி, இரண்டு ஆசிரியைகளுடன் சென்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர். வெயாங்கொடை பிரதேசத்தில்... Read more »

அகதிகளுக்கு நிரந்தர விசா கோரி ஆஸ்திரேலியாவில் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். “அகதிகளுக்கு விடுதலை”, “அனைவருக்கும் நிரந்தர விசாக்களை வழங்குக”, “அகதிகள் குடும்பத்தினரை மீண்டும் இணையுங்கள்” உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை போராட்டக்காரர்கள்... Read more »

ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் – வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனின் காக்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மாணவர்கள்... Read more »

கோட்டாபயவின் மீள் பிரவேசம்! நவம்பரில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு: சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பலதீர்மானங்கள்... Read more »

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் 19 வயது யுவதி கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய பெண்ணொருவர் இன்று புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், இபுனுபதுதா வீதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட... Read more »

ராணியாரின் இறுதி நாட்கள் – கசிந்த தகவல்கள்

ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது இறுதி நாட்களில் துடுக்காகவே காணப்பட்டாலும், உணவை மிகவும் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் தமக்கு மிகவும் பிடித்தமான பால்மோரல் மாளிகையில் வைத்து காலமானார். தமது இறுதி நாட்களில் அவர் துடுக்காகவே... Read more »

பணப்பற்றாக்குறை -கடும் நெருக்கடியில் அரச நிறுவனங்கள்

பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்களில் அன்றாட... Read more »

தென்னாபிரிக்காவில் கோரவிபத்து -19 மாணவர்கள் துடிதுடித்து பலியான துயரம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மினிவான் மீது பாரவூர்தி மோதியதில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு – நடால் மாகாணத்தில் ஆரம்ப பாடசாலை... Read more »

ரஷ்யாவிற்கும் கொழும்புக்கும் இடையில் மீள ஆரம்பிக்கப்படும் விமானம் சேவை

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் நடுப்பகுதியில் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் ரியா நோவொஸ்டிக்கு தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கைக்கு அமைய... Read more »

போதிய அரிசி கையிருப்பில். இறக்குமதியை இடைநிறுத்த கோரிக்கை…!

நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறு போகத்தில் எதிர்பார்த்ததை விடவும் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக... Read more »