எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் டொலர்

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட மூன்று எரிபொருள் கப்பல்கள் சில நாட்களாக தரித்து நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்களுக்கு செலுத்த கையிருப்பில் போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால்... Read more »

தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வாருங்கள்! ரணில் விடுத்துள்ள அழைப்பு

2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது. ,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து... Read more »

ரணில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் மனித உரிமைகள் குழு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மனித உரிமைகள் குழு, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் ஆகியவை  இலங்கையில் தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளன. இந்த பிரச்சினையில் ஒரு அவசர மற்றும்... Read more »

பேக்கரி தொழில் வீழ்ச்சி -வெளிநாடு பறக்கும் பணியாளர்கள்

இலங்கையில் கோதுமை மாவிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழில் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதுடன் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. மாவுக்கு தட்டுப்பாடு, பேக்கரி தொழில் வீழ்ச்சி காரணமாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம்... Read more »

மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி! தசுன் ஷானகவின் கோரிக்கை

ஒரே நாளில் கிரிக்கெட் மற்றும் வலைபந்து இரண்டிலும் ஆசியாவின் சாம்பியனானது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் வலைபந்தாட்ட வீரர்கள் மீது கிரிக்கெட்டைப் போல கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் நடைபெற்ற... Read more »

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம்! அலி சப்ரி வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்... Read more »

பதவி விலகியதன் பின்னர் முதல் தடவையாக பகிரங்க தகவல் வெளியிட்ட கோட்டாபய

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றனை வெளியிட்டு கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவைத்துள்ளார். ” துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண இறுதி... Read more »

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (செப்டம்பர் 12) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 358 ரூபா 53 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 50 சதமாகவும்... Read more »

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருகோணமலை – வான் எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வான் எல பகுதியில் இருந்து சிறாஜ்நகர் 97ஆம் கட்டைக்கு நேற்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று பயணித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில்... Read more »

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்கிறது அரச மருந்தாளர்கள் சங்கம்!

அடுத்த இரண்டு வார காலத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாட்டில் புற்று நோய், இருதய நோய், வலிப்பு நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன்படுத்தும்... Read more »