இலங்கையில் எட்டு மணித்தியால மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி, ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது. உரிய காலத்திற்கு ... Read more »
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக எதிர்கட்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது. எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர், லச்மன் கிரியெல்ல இதனை இன்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்... Read more »
பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் மிகுதி கட்டணம் செலுத்தப்படவுள்ளது. மேலும், 35,000 முதல் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை... Read more »
இலங்கையின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 1817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது 2022 ஒகஸ்ட் மாதத்தில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா... Read more »
பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு வழங்குவதற்காக பசில் ராஜபக்ஷ ஒரு பில்லியன் ரூபாவை வாங்கியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பணத்திற்கு விற்றதாக கூறும் மேர்வின் சில்வா, இது தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்பு கொண்டவர் பசில்... Read more »
சவூதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் சவூதி அரேபியாவிற்கான தூதுவர் என்ற வகையில் நசீர் அஹமட் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத்... Read more »
பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல காவல் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பாதுக்க... Read more »
எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி... Read more »
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களினால் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச... Read more »