எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, அதிகமான கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன்... Read more »
ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்றிரவு (29) கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-லல்லேன் பகுதியில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே... Read more »
மட்டக்களப்பு -தன்னாமுனையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கோரியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன்... Read more »
அரசாங்க வங்கிகளின் மொத்த பங்குரிமைகளில் 20 சதவீதத்தினை குறித்த வங்கிகளின் வைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பொருளாதார... Read more »
2021 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்குபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »
புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்டோரிடம் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் புலம்பெயர் நிதியமொன்று (diaspora fund) நிறுவ அதிபர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார். இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்றுநாடாளுமன்றில்சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் வாழ்கின்ற... Read more »
கொழும்பு – மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில், போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று கைது செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மருதானையிலிருந்து இன்று காலை... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... Read more »
திடீரென பெய்த மழை காரணமாக யாழ்.பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வியாபாரிகள் இதன்போது யாழ்.மாநகரசபையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கால்வாய்களுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் தேங்கியுள்ளநிலையில், மழைநீர் செல்வதற்கான வழியின்றியே இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதாக... Read more »
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முட்டையின் விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டே இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பல்பொருள் அங்காடிகளில் பொதி செய்யப்பட்ட முட்டைகளை... Read more »