அண்ணன் உயிரிழந்து 14 நாட்களில் தங்கை யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கண்டி – ஹசலக யாய பஹா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. அனுத்தரா இந்துனில் என்ற 17 வயதான சிறுமியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் அண்ணன் கடந்த 14... Read more »
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51% பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக... Read more »
இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள... Read more »
சிங்கராஜா வனத்திற்கு அருகாமையில் தனக்கு சொந்தமான பங்குதாரர் சொத்து இருப்பதாகவும், அனைத்து சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்,... Read more »
யாழ்ப்பாணம் – கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட... Read more »
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை இவ்வருடத்தின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர்... Read more »
இலங்கை பூராகவும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடியால் நாடுபூராகவும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் மக்கள் வாகனங்களுடன் மிக நீண்ட... Read more »
2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர்ஒருவர் சித்தியடைந்துள்ளார். கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறுஉயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு, மூன்று பாடங்களிலும் B சித்திகளைப்... Read more »
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வகட்சி அரசில் இணைவதற்கு சஜித் பிரேமதாஸ எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்புக்கு ஊடகங்களிடம் பதில் வழங்கும் வகையிலேயே... Read more »
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல பேக்கரிகள் மூடப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்தநிலையில், சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மொத்த விற்பனை... Read more »