திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்பு

திருகோணமலை -மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை நேற்று(26) திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.... Read more »

ஏறாவூர் வன்முறை சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு- ஏறாவூரில் கடந்த மே 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏறாவூர் வன்முறைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு... Read more »

அரச அடக்குமுறைகள் தொடர்பில் பதிலளிக்க மறுத்த ரஞ்சன்!

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்கா அதிபரின் பொது மன்னிப்பில் விடுதலையான பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »

வெளி உலகத்திற்கு பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கையின் இரகசியங்கள்!

ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

இலங்கையில் டீசல் பிரச்சினையை தீர்க்க தயாராகும் மத்திய கிழக்கு நாடு…!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று 50 சதவீத பேருந்துகளே... Read more »

எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இன்று……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று  27.08.2022 பிற்பகல் 2.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  மிக மிக  சிறப்பாக இடம்பெறவுள்ளது. அதனைந் தொடர்ந்து பேரூந்தை  திருவிழாவின் போது புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம்... Read more »

ஒன்பது வயதான மகளை கொடூரமாக சித்திரவதை செய்த தாய் கைது….!

தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு... Read more »

வாடிகள் தீக்கிரை. ஒரு கோடி ரூபாவிறக்கு மேல் வலைகள் எரிந்து நாசம்……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று பிற்பகல்  6:00 மணியளவில் மூன்று கடற்றொழில்   வாடிகள்  தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில்  மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு... Read more »

12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு ஏற்படும் நிலை….! பொது பயன்பாட்டு ஆணைக்குழு.

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டும் போதிய நிலக்கரி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 12 முதல் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் ஜானக ரத்நாயக்க எச்சரித்துள்ளார். அத்துடன்,... Read more »

இறக்குமதிக்கு தடை, மக்களுக்கு பாரிய பாதிப்பு…! புழுது ஜயகொட.

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட... Read more »