விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா... Read more »

யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் ஒருவரையும், திருட்டு பொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இதற்கமைய,... Read more »

இலங்கையை காப்பாற்ற தயாராகும் அமெரிக்கா

இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் சமந்தா பவாரிடம் குறித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் போது அவர்களுக்கு... Read more »

பேரழிவின் விளிம்பில் ஐரோப்பா – விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ரஷ்யா உலகம் முழுவதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு பேவையில் புதன்கிழமை ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுகந்திர தினமான புதன்கிழமை நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்பு பேரவையில் காணொளி... Read more »

மண்ணெண்ணெய் விலையுயர்வு! பணக்காரர்களுக்கு கடலைக் கொடுக்கும் திட்டம்

மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி, சிறு மீனவர்களை வேலையிழக்கச் செய்து, கடல் வளத்தை பெரும் செல்வந்தர்களுக்கு கிடைக்கச் செய்யும் திட்டம் உள்ளதா என தென்னிலங்கையின் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார். கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது. இதற்கமைய ஒரு... Read more »

எரிபொருள் கொள்வனவில் பாரிய மோசடி – ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெறும் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் அல்லது... Read more »

பெருந்தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் கைது

சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கை பிரஜைகள் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஹைதராபாத் சுங்கத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.... Read more »

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் வீடு கொள்வனவு! வெளியாகியுள்ள தகவல்

ராஜபக்ச குடும்பத்தினர்கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர்... Read more »

நல்லூரானின் தேர்த் திருவிழாவில் தியாகி திலீபன் நினைவிடத்தில் தாகசாந்தி….!

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு நல்லைக்கந்தனை நாடிவந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தணிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரால் கடந்த இரண்டு... Read more »

ஊதுபத்தி வியாபாரம், பெண்கள் மற்றும் அவர்களை வைத்து தொழில் செய்தவர்கள் 5 பேர் விளக்கமறியலில்! 7 குழந்தைகள் மீட்பு.. |

கையில் குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்களும், ஆண் ஒருவரும் அவர்களை வேலைக்கு அமர்தியவரும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 7 சிறுவர்கள் சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர்களின் கண்காணிப்பில் வைக்க... Read more »