நாகர்கோவில் படுகொலையின் 26 வது நினைவேந்தல்….!

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.... Read more »

ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து கைதிகளை விடுவித்தாலும் ஆச்சரியமில்லை – அசோக அபேசிங்க –

ராஜபக்ச அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashok Abeysinghe) குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2020ஆம்... Read more »

மேலும் 66 பேர் கொரோனாத் தொற்றால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 36 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்... Read more »

கொலையாளியே கொலையை விசாரிப்பதுதான் இந்த உலகத்தின் நீதியா? – சிறிதரன் கேள்வி

உள்ளக விசாரணை என்ற பெயரில் கொலையாளியே தான் செய்த கொலைகளை விசாரிப்பதுதான் இந்த உலகின் நீதியா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. பொதுச்செயலாளருக்குக் கூறிய உள்ளக விசாரணை ஒரு நீதியான விசாரணை அல்ல.” இவ்வாறு சபையில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட... Read more »

கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா நிதித் திட்டத்தில் வடக்கு மாகாணம் புறக்கணிப்பு!

இலங்கை முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா நிதித் திட்டம் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் மேற்படி நிதித் திட்டம் தொடர்பில் செயலணியால் அண்மையில் சகல பிரதேச... Read more »

தடத்தில் சிக்கிய சிறுத்தை வில்பத்து காட்டில் விடுவிப்பு! (photos)

முல்லைத்தீவு, முறிகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் சிறுத்தை ஒன்று அகப்பட்ட நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் உயிரோடு மீட்கப்பட்டது. கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்கிய அவசர தகவலின் பிரகாரம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிறுத்தை மீட்கப்பட்டு அடர்ந்த வனப் பகுதியான... Read more »

கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா….!

கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரினதும் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கே. கஜிதரன் (வயது 37), எஸ். தம்பிராசா (வயது74) கே.கேசவன் (வயது 27) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். Read more »

20-29 வயதினருக்கான தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்….!

இலங்கையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் ஏற்படும் இறப்புக்களை தடுப்பூசி மருந்தேற்றலின் மூலமே தடுக்க முடியும் என்றும் இளம் பராயத்தினருக்கு கொரோனாவின் அறிகுறியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உடனே தெரியாதவை. இதனால் உங்களால் உங்களது வீடுகளிலும் சுற்றுப்புறத்திலுமுள்ள முதியவர்கள், குழந்தைகள்... Read more »

வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தல்!

தற்பொழுதுள்ள கொரோனா பரவலின் மத்தியில் வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் – இலங்கையினுடைய இறப்பு விகிதம் 2.4 விகிதமாகக் காணப்படுகின்ற நிலையில், வட மாகாணத்தில் தொற்றின்... Read more »

சுமந்திரன் வெளியேறினால் தான் அவர் செய்தவற்றை கடவுள் மன்னிப்பார்….!காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பு, வவுனியா.

நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார் என்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும் தெரிவித்ததாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர , OMPஇடத்தில் அல்ல என்று... Read more »