ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார்

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்காக... Read more »

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் கூற முடியாது என்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டால், அதனை, தான் தனித்து எதிர்கொள்ள நேரிடும் என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபான விற்பனை நிலையங்கள்... Read more »

ஜனாதிபதிக்கும், குவைத் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு! –

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குவைத் பிரதமர் ஷேக் சபா அல் ஹமாத் அல் சபாவை, நியூயோர்க்கில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால நெருக்கமான மற்றும்... Read more »

ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவரும் சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பண்டாரநாயக்க நினைவேந்தல் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... Read more »

கனடா பொது தேர்தல்! வாக்கு பதிவின் தற்போதைய நிலவரம் –

கனடாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைவான ஊழியர்கள் மற்றும் குறைவான வாக்களிப்பு மையங்கள் இயங்குவதாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க நேரிட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல்... Read more »

கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபருக்குக் கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்லத்துரை கதிர்காமசாமி (வயது 70) என்பவர் வீட்டில் திடீரென உயிரிழந்திருந்தார். அவருடைய மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்போதே அவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more »

கைதிகளை சந்தித்த கஜேந்திரன் எம்பி….!

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிறைச்சாலைக்கு அவர் நேற்று (20) சென்றார். கடந்த 12 ஆம் திகதி... Read more »

29 தொடக்கம் 30 வயது பிரிவினருக்க இன்று தடுப்பூசி ஆரம்பம்.. |

யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். இதன்படி கீழ் இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணை பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுகாதார பிரிவு அறிவித்திருக்கின்றது. Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 16 ஆயிரத்தை கடந்த மொத்த தொற்றாளர் எண்ணிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா நிலவரம் தொடர்பான தினசரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 53 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 37 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை... Read more »

யாழ்.அரியாலை – பூம்புகார் கொலை சம்பவம்..! கள்ள காதலனை காப்பாற்ற மாறுபட்ட வாக்குமூலம…. |

யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவளையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். து.செல்வக்குமார்(வயது32) என்பவர் தேங்காய் திருவளையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில்... Read more »