எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றையதினம் வீடு திரும்பினார்.

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்றையதினம் வீடு திரும்பினார். இவருக்கு கடந்த செப்டம்பர் 11ம் திகதி கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாட்களாக சிகிச்சை... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி….!nafso

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி காலை 9:30 மணிக்கு இணைய வளியில் (Passcode: 313906 Webinar ID: 871 6508 3331 Passcode: 313906) இடம் பெறவுள்ளதாத தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்... Read more »

வட்டுக்கோட்டையில் செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய தமிழ் பொலிசார்!

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற செய்தியாளரை தகாத வார்த்தைகளினால் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏசி அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. வட்டுக்கோட்டை தெற்கு... Read more »

ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உதவிகள்….!

ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன் குளம், குசனார் மலை, கித்துள் மற்றும் மயிலவெட்டுவான் ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு தலைமையில்... Read more »

சேவா லங்கா மன்றத்தால் உதவிகள்….!

கொரோனாவினால் பயணக் கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு சசாகாவா வழிகாட்டலில் ஜப்பான் நாட்டின் நிப்போன் பவுண்டேஷனின் நிதியளிப்பில் சேவா லங்கா மன்றத்தின் வழிகாட்டலில் உலர் உணவுபொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, அனுராதபுரம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி,முல்லைத்தீவு,... Read more »

மது போதையில் சென்ற குழுவினர் கண் மூடித்தனமாக தாக்குதல்– வீட்டில் உள்ள மூவர் பலத்த காயம்…..!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 6.30 மணி அளவில் மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த... Read more »

கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பு….!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தின் பாவனைக்காக யாழ்ப்பாண மருத்துவ பீட கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம், யாழ்ப்பாண மருத்துவ பீட கடல் கடந்த பழைய... Read more »

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர்கள் சடலங்களாக மீட்பு…!

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளம் ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 21... Read more »

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய ஜெனிவா….! அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

ஜெனிவா ஆரவாரம் முடிவுக்கு வந்து விட்டது. இனி அடுத்த தொடரின் போது தான் ஆரவாரம் உருவாகும். பெரியளவிற்கு இல்லாவிட்டாலும் சுமாராக வரும் எனக் கருதப்பட்ட மனித உரிமைகள் பேரவை ஆணையாளின் அறிக்கை தமிழ் மக்களை கடும் அதிர்ப்திக்கு உள்ளாக்கியுள்ளது. சென்ற கூட்டத் தொடரில் ஆணையாளரினால்... Read more »

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை..! வீட்டிலிருந்தவர்கள் சுதாகரித்ததால் தாக்குதல், ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்து நையப்புடைப்பு.. |

வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களை வீட்டிலிருந்தவர்கள் மடக்கிய நிலையில் ஒருவர் சிக்கிக்கொள்ள மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் லாவகமாக... Read more »