சரணாலயத்துக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடிய ஐவர் கைது.

விக்டோரியா ரந்தெனிய மற்றும் ரந்தெம்பே ஆகிய சரணாலயங்களிலுள்ள விலங்குகளை வேட்டையாடி வந்த ஐவரை கீர்த்திபண்டாபுர வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடிப்பொருட்கள் மற்றும் இறைச்சியை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திய ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் வனவிலங்குத் திணைக்கள... Read more »

மக்களை ஒடுக்கினால் நீதிமன்றம் செல்வோம்! – ரணில் எச்சரிக்கை

அரசால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மக்களை ஒடுக்குவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-... Read more »

விடுதலைப் புலிகளை அழித்ததுபோன்று இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் புலிகளின் பயங்கரவாதத்தை நாட்டில்... Read more »

சடலமாக மீட்கப்பட்ட யாழ்.மருத்துவ பீட மாணவி! சோகத்தில் பாடசாலை சமூகம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என... Read more »

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு Pfizer கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியசாலைகளில் இதற்கான தடுப்பூசி இடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை சிறுவர் மருத்துவ நிபுணர்களின் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில்... Read more »

தொலைபேசியில் பேசிக் கொண்ட ஜோ பைடன் – ஜி ஜின்பிங்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 7 மாதங்களுக்குப் பின்னர் பேசிக் கொண்டனர். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. உலகின் மிகப் பெரிய பொருளாதார ஜாம்பவானாக திகழ்கின்றன அமெரிக்கா மற்றும் சீனா. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும்... Read more »

கிளிநொச்சியில் மேலும் இருவர் கொரோனாவால் பலி!

கிளிநொச்சியில் நேற்று உயிரிழந்த இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் 99 வயதுடைய பெண் என்றும், மற்றையவர் 51 வயதுடைய... Read more »

வவுனியாவில் ‘டெல்டா’ தாண்டவம்! – 50 பேருக்குத் தொற்று உறுதி…!

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் சில நேற்றிரவு வெளியாகின. அதில் செட்டிகுளம் சுகாதார... Read more »

வவுனியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பலி!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 7 பேர் நேற்று... Read more »

சர்வதேச நீதி கேட்பவர்கள் எவ்வாறு ஒரு பக்கத்தை விசாரிக்க கேட்பது?.. கஜேந்திரகுமாரும் இரு தரப்பையும் விசாரிக்க சம்மதித்தார் என்கிறார் சுமந்திரன்.. |

சர்வதேச நீதி கேட்டு செல்பவர்கள் எவ்வாறு இவர்களை மட்டும் விசாரி அவர்களை விசாரிக்காதே என  கூற முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பினார். நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஐநாவுக்கு அனுப்பிய கடிதம்... Read more »