ஐக்கிய நாடுகள் சபையின் தலமையில், ஏற்பாட்டில் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தமிழ் தேசிய கடைசியின் பொது செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... Read more »
இலங்கையில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9 பேர் என்ற அடிப்படையில் கோவிட் மரணங்கள் பதிவாவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை மேல் மாகாணத்தில் நூறு வீதம் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும்... Read more »
பொது முடக்கத்தினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள தனியார் பஸ்களின் சாதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் நிவாரணப்பொதிகள் அல்லது நிவராணப்பணம் வழங்க வேண்டும் என்று, ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும்... Read more »
இரணைமடு பகுதியில் இன்று யானை தாக்கி ஓருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடுகுளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் மீன் கொள்வனவிற்காகச் சென்றவரையே யானை தாக்கியுள்ளது. சம்பவத்தில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய... Read more »
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொண்ட இங்கிலாந்து இராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. இங்கிலாந்து இந்த பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்... Read more »
டெல்டா வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு மற்றும் இருதயம் பலவீனமடையும் பிரச்சினை ஆகியன எழுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். அதனால் கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம்... Read more »
நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறினால் 5வது அலையை தடுக்க முடியாமல் போகலாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவுசெய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால்... Read more »
– 109 ஆண்கள், 83 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 156 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 192 மரணங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) 3,698 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 425,255ஆக உயர்வடைந்துள்ளது. Read more »