நுவரெலியா நகருக்கு உட்பட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு..!

நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான மழை வானிலை நீடித்து வருகின்ற போதிலும் அதனைப் பொருட்படுத்தாது, நுவரெலியா நகருக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது. நுவரெலியா மாநகர சபையின் குடும்ப சுகாதார சேவை காரியாலயத்தில், சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி... Read more »

கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா –

கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 10 பேருக்கே கொரோனா... Read more »

பருத்திதுறையில்139 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது! –

இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில்... Read more »

ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையம் செல்ல தலிபான்கள் தடை…!

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி... Read more »

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் 581 பேர் கைது!

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த... Read more »

கொழும்புக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்! |

கொழும்புக்கும் – மாலைத்தீவின் மாலேயிக்கும் இடையிலான சேவையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவின் சுற்றுலாத்துறையை மீண்டும் மேம்படுத்தும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி துபாய்க்கும் மாலேயிக்கும் இடையிலான சேவையே கொழும்புக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.... Read more »

யாழ்.மாவட்டத்தில் 72 பேர் உட்பட வடக்கில் 93 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு முடிவு.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 72 பேர் உட்பட வடக்கில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 528 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் ... Read more »

கிளிநொச்சியில் தொற்று நீக்கி விசிறிய ஊடகவியலாளர்கள்…,!

கிளிநொச்சி மாவட்டத்திலும்  கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது .இதுவரையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி மீண்ட... Read more »

மட்டு.கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் மூன்று இலட்சம் பெறுமதியான மாலை பறிப்பு –

மட்டக்களப்பு-கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்க மாலையைக்கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார். விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனியாக... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம்பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கல் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்த பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 64 382 குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு... Read more »