தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சிக்கிழக்கு இளைஞர்களின் இரத்ததானம்.

தமிழ் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் ” எமது விடுதலைக்காக உயிர்களையே தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக ஒருதுளி குருதி கொடுப்போம் வாரீர்..” என்னும் தொனிப்பொருளில் இன்றையதினம்(25)  இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது இரத்த தான முகாம் வடமராட்சி... Read more »

ஜனாதிபதி அனுரவின் கொள்கை விளக்க உரை குறித்து தமிழ் தலைவர்கள் அதிருப்தி

மிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை என வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை முன்வைத்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில்... Read more »

சவேந்திர சில்வா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி... Read more »

புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் சவாலை தமிழ் கட்சியொன்று நினைவூட்டுகிறது

இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று நினைவுபடுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால்... Read more »

வடக்கில் மூன்று ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை, எச்சரிக்கும் நாமல் எம்.பி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் காணி அதிகாரிகளால் உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட, மூன்று தசாப்தங்களாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடக்கின் தனியார் காணியொன்றை விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணியில் ஸ்தாபிக்கப்பட்ட பருத்தித்துறை, கற்கோவளம்... Read more »

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. Read more »

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கை – உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை! .

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA)  மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம்... Read more »

நெடுந்தீவு கடைற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 10ஆம் திகதி சீ ஒவ் ஸ்ரீலங்கா எனப்படும் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுட்ட 23... Read more »

சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிப்பு…!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர்... Read more »