தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் அனந்தி சசிதரன்…!

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் என முன்னாள் மாகா அமைச்சரும் தமிழர் சுயாட்சி கழக பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று முற்பகல் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும்... Read more »

இந்திய இராணுவ தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்க பாதிரியாருக்கு அஞ்சலி..!

36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கிழக்கில் 07.06.2024  நினைவு கூரப்பட்டுள்ளார். மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மட்டக்களப்பு... Read more »

வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை……! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை. தேர்தல் தொடர்பாக இலங்கை தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும்... Read more »

கிழக்குப் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல் துறையின் அநாகரீக மற்றும் அடாவடியான செயற்பாடுகள் ஊடாக மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக்... Read more »

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம்

திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில்... Read more »

நினைவேந்தலை அடக்கினால் மீண்டும் இருண்ட யுகம் உருவாகும் – சபா குகதாஸ் எச்சரிக்கை!

தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஏவி விட்ட வன்முறையும் அதனால் ஏற்பட்ட பாரிய இனவழிப்பு முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி வாக்களித்த சொந்த மக்களால் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி ஓட ஓட துரத்தப்பட்டதை பேரினவாத ஆட்சியாளர்கள் சிறிது காலத்தில் மறந்து விட்டார்கள் என்பது... Read more »

இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்…! பேராசிரியர் K.T.கணேசலிங்கம்.

இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர்  பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் ஆற்றிய நினைவுப்பேருரை…! (தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்ட, தந்தை செல்வாவின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் (26.04.2024),... Read more »

தமிழ் மக்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு பஞ்சமில்லை” வெளியானது புதிய அறிக்கை.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் பஞ்சமில்லை என சர்வதேச அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் வெளியிட்டுள்ள (ITJP) புதிய அறிக்கையில், உள்நாட்டுப் போர்... Read more »

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை சற்றுமுன்னர் ஆரம்பம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகர் அவர்களார் வேல் கையளிக்கப்பட்டுள்ளது. சுமாத மேற்பட்டவர்கள் குறித்த கதிர்காமம்... Read more »

ஒற்றையாட்சியை வலிந்து திணிக்காதீர்கள்” சர்வதேச சமூகத்திடம் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை!

ஒற்றையாட்சி நிராகரித்தமையால் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள, வடக்கின் மக்கள் பிரதிநிதி ஒருவர், முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடுவதன் நோக்கம் படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வதற்காக மாத்திரமல்ல எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ் தேசிய... Read more »