களமுனையில் போராடி மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் மக்களின் நிம்மதியும் சுதந்திரமும் மாத்திரமே.! வட்டுக்கோட்டையில்  வேந்தன்

களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார் ஜனநாயக... Read more »

தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்கள் ஆதரிப்பது அர மடைமைத்தனம் – ஐங்கரநேசன்

ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர். இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு... Read more »

ஜேவிபியினர் மிகவும் நல்லவர்கள் – கஜதீபன் தெரிவிப்பு!

ஜேவிபியினர் மிகவும் நல்லவர்கள். ஏனென்றால் உண்மையான விடயங்களை அவர்கள் பகிரங்கமாக சொல்கின்றார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் கஜதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (28) மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தென்னிலங்கைவாசிகள் நாட்டிய விஷச்செடி தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது – சுரேந்திரன் ஆதங்கம்!

எமது ஒற்றுமையை குலைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாட்டப்பட்ட விஷச் செடிகள் தற்போது விருட்சமாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மூளாயில் நடைபெற்ற தேர்தால் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே... Read more »

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் எதிர்வரும் 8/11/2024 வரை விளக்கமறியல்….!

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும்  எதிர் 8/11/2024 மத திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில் நீதவான் குமாரசுவாமி  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து... Read more »

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் ஆரம்பம்…!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளரும்,  ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகள்  இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு... Read more »

எல்லை  தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது…!

எல்லை தாண்டி  இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள். இலங்கை கடற்படையால் இன்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை  இலங்கை... Read more »

தமிழ் அரசியல் சிதறல் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பலவீனப்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு, 22 தேர்தல் மாவட்டங்களிலும், கட்சிகள் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 அணிகள் போட்டியிடுகளின்றன.... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட் தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின்... Read more »

காணி உரிமை கோரி ஜனாதிபதியின் வடக்கு பிரதிநிதியை வன்னி தாய்மார் சந்தித்தனர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் காணியற்ற தமிழ் தாய்மார்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல வருடங்களாக இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனாதிபதியின் மாகாண பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவில் இராணுவத் தளம்... Read more »