செல்பியால் ரஷ்ய யுவதிக்கு நேர்ந்த விபத்து

ரயிலில் பயணித்த ரஷ்ய பெண்ணொருவர் இன்று செல்ஃபி எடுக்க முற்பட்டபோது, தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா என்ற 25 வயதுடைய யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார்... Read more »

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் வெளிநாட்டவர் பலி: மூவர் காயம்!

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறி ஒன்றின் பின்னால் வான் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். Read more »

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர்

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது. மட்டக்களப்பு – குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர்... Read more »

தைப்பூச திருமஞ்ச உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள், இடம்பெற்று  எம்பெருமான் எழுந்தருளியாக உள்வீதி, வெளிவீதியூடாக திருமஞ்சத்தில் வீற்று பக்தர்கள் அருள்பாலித்தார்.... Read more »

யாழில் கறுப்பு ஐனவரி நினைவேந்தல்!

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் நீதி கோரி “கறுப்பு ஐனவரி” நினைவேந்தலும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது. யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் சுதந்திர ஊடக இயக்கத்தின் பங்கெடுப்பில் குறித்த நினைவேந்தல் மற்றும் கலந்துரையாடல் மதியம் 2 மணியளவில் யாழ் நகரில் உள்ள... Read more »

03 தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாத வேதனத்துடன் வழங்குவதை நிறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடன் அமுலாகும் வகையில் ரத்துசெய்வதாக அறிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வாறே, ஜனவரி மாதத்திற்கான, வழக்கமான வேதனத்துடன் குறித்த, மேலதிக கொடுப்பனவை... Read more »

உயரும் அதிபர்களின் கொடுப்பனவு?

அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தி கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக அபிவிருத்தி செய்யவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில், ஆறு முக்கிய புள்ளிகள் மூலம் சிக்கல் ஆய்வுகள்... Read more »

இலங்கை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பல்வேறு நிலைகளில் உள்ள இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது. மருத்துவம், துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக... Read more »

குறைகிறது மின் கட்டணம்

கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின்சார சபைக்கு கணிசமான இலாபம் கிடைத்துள்ளதாகவும் இம்மாதம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையை... Read more »

வடக்கு,கிழக்கில் பலத்த மழை எதிர்பார்ப்பு

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். எனவே,... Read more »