நெடுந்தீவில் கஞ்சாவுடன் சந்தேகபர் ஒருவர் கைது!

நெடுந்தீவு பகுதியில் கஞ்சாவுடன் சந்தேகபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

ஜோர் தா னில் சிக்கிய தொழிலாளர்களை ‘மீட்கும் இயலுமை’ இலங்கைக்கு இல்லை

ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் குறித்த பெண்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையோ அல்லது நாடு திரும்பவோ உதவும் இயலுமை இல்லாமையினால்... Read more »

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து 24 ஆயிரம்    போதை   மாத்திரைகளுடன் ஒருவர் கைது.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள்  மீட்கப்பட்ட தோடு ,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தாழ்வுபாடு கடற்படைக்கு... Read more »

வவுனியா நெளுக்குளம் பொலிஸாரினால் மக்கள் நலனை கருதி விசேட பூசை வழிபாடு

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தது. இவ் வழிபாட்டில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய... Read more »

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பலி!

நேற்றையமுன் தினம் கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்குரு வீதி, வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசு (வயது 68) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் குளித்துக்கொண்டு... Read more »

மது போதையில் இலுப்பைக்கடவை பொலிஸார் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் படுகாயம்

இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் இருவர் மது போதையில் கடுமையாக  தாக்கிய நிலையில்  பலத்த காயங்களுடன் மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மாந்தை மேற்கு பிரதேச... Read more »

வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு – வவுனியாவில் சுகாதார சிற்றூளியர்கள் போராட்டம்

சம்பள அதிகரிப்பு , பதவி உயர்வு போன்ற கோரிக்கைகi முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களினால் இன்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக வைத்தியசாலை... Read more »

உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர்  என்.எம்.  ஆலம்

இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இது வரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே  உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின்... Read more »

துணி துவைக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய தேரர் கைது!

குருணாகல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட துணி துவைக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய விகாரையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் குருணாகல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருயுடன் கைது... Read more »

யாழில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பல வீடுகளின் உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு... Read more »