வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை... Read more »

மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில்... Read more »

கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா

கனடாவில் இயங்கிவரும் தமிழ்ச் சமூகம் மற்றும் மொழி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வரும் அமைப்புக்களின் சம்மேளனமாய் விளங்கும் கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா 08-01-2024 திங்கட்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள... Read more »

கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம்... Read more »

நித்தியவெட்டையில் பெண்களுக்கான சுயதொழில் கற்கைநெறி ஆரம்பம்

வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பெண்களுக்கான தையல்,மேக்கப்,ஐசிங்,கைவேலை மற்றும் மனைப் பொருளியல் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு முள்ளியான் கிராம அலுவலர் கி. சுபகுமார் தலைமையில் இன்று காலை 10.00 ஆரம்பமானது. வெற்றிலைக்கேணி,முள்ளியான்,போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கை நெறியில் பல... Read more »

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து ஏற்படும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில்... Read more »

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சறபுல் அனாம் முஹம்மது அமியாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நேற்று (10) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி  கே.எல்.எம்.சாஜித்  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஏ.எஸ்.எம் அமியாஸ்    மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையம் பள்ளமடுவில் திறந்து வைப்பு

மன்னார் யாழ்ப்பாண ஏ 32 வீதியில் பள்ளமடு கிராத்தில் கிராத்தில் நேற்று 10/01/2024 பங்கு தந்தை அவர்களால் இறைவழிபாடுகள் நடைபெற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பெற்றோலிய கூட்டுதாபன பிராந்திய முகாமையாளர் இணைந்து நாடாவினை வெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந்... Read more »

மன்னார் நகரசபையின் முறையற்ற செயற்பாடு

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய்  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மன்னார் நகரசபை முன்னதாக பாப்பா மோட்டை பகுதியில்  உள்ள... Read more »

இன்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை இன்றைய தினமும் தொடரும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுகளிலும் இன்றையதினம் தொடர்சியாக கன மழை பெய்யும்... Read more »