தொழிற்சங்க நடவடிக்கையால் சுகாதாரசேவைகள் ஸ்தம்பிதம்!!

அரசதாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35000 ரூபாய்கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி  நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறைபோராட்டம்... Read more »

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில்... Read more »

மனைவியால் வெடித்துச் சிதறிய கணவன்

கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று(10) காலை டைனமைட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே உயிரழந்துள்ளார். இவருடைய மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை... Read more »

முல்லைத்தீவில் பாரிய தீ விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய... Read more »

இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் போராட்டத்தில் குதித்தன

கிளிநொச்சி வைத்தியசாலையிலும்,  சுகாதாரபரி சோதகர்கள் பணிமனையிலும், அனைத்து குடும்ப சுகாதார சேவை அலுவலகங்களிலும் பகிஸ்கரிப்பு முன்னெடுத்தப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு DAT கொடுப்பனவு ரூ.35000 உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு ரூ.50000 உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிடம் கொடுக்கப்பட்ட ரூ.3000 மட்டும் அப்படியே உள்ளது.... Read more »

சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகம் மாற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு

யாழ் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவந்த சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகம் மாற்றப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை காலமும் போக்கறுப்பு கிராம சேவையாளர் பிரிவில் இயங்கிவந்த. உப அஞ்சல் அலுவலகத்தை போதிய வருமானம்... Read more »

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்... Read more »

மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 சகோதர சகோதரிகள் உள்ள... Read more »

இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ள IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு(10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். நாளை(11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இதுவரையான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின்... Read more »

இலங்கைக்கு அருகே இரு தாழமுக்கம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளதால், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் அசாதாரண காலநிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்... Read more »