ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு   வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம்…!

கிளிநொச்சியில் சுயாதீன  ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் அவர்களை  கடந்த   (26.12.2024)  வாகனத்தில் சென்றோர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனைத் தமிழ்ச்செல்வன் எதிர்த்துப் போராடியதை அடுத்து, கடத்தற்காரர்கள் அவரைத் தாக்கி, எச்சரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த  26.12.2024 அன்று  மாலை 5.00 மணியளவில்... Read more »

2024 நடப்பு அரசாங்கங்களுக்கு கல்லறையாகியது! புதிய வருடம் ஆட்சியினை பாதுகாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.’ இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும் எதுவும் புதிதாக தோன்றிவிடப்போவதில்லை. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட அன்றாட பிரச்சினைகள் மற்றும்... Read more »

ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவு..! இ.முரளிதரன்.

ஆழிப்பேரலை எனும் கடல்கோளால் காவு கொள்ளப்பட்ட 20 வது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்  26/12/2004 அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ  சுனாமி என்கின்ற ஆழிப்பேரலை மிகமிக மோசமாக தாக்கியது.  இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் உருவாகிய பூமி அதிர்வு ஆழிப்லேரலையாக மாறி  சுற்றியுள்ள... Read more »

அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் பாலன் பிறப்பு நல்வாழ்த்துக்கள்…!

பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர்,  இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அன்புடன் ஆசிரியர் Read more »

ஆளணி இன்மையால் வட்டு வைத்தியசாலை வளங்கள் வீணாகிறது – பவா எம்.பி தெரிவிப்பு!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தேவையான கட்டட வசதிகள் உள்ளிட்ட வளங்கள் காணப்படுகின்றன. இருந்தும் பணி நியமனங்கள் வழங்கப்படாததால் அந்த வளங்கள் வீணடிக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிறி பவானந்தராஜா தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை... Read more »

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

விண்ணுலக தேவன் மண்ணுலகில் அவதரித்து, பாவங்கள் போக்கிட பாரினில் வந்துதித்த இயேசு பாலகன் பிறந்த நன்னாள் இந்நாளாகும். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மலர்ந்த இவ்  நத்தார்  பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என... Read more »

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் – இளங்குமாரன் எம்.பி தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாடு... Read more »

அநுரா-மோடி இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் இலங்கைத் தீவை இந்தியாவின் இன்னோர் மாநிலமாக்குகிறதா? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

பஇலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பக்கங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய உறவின் முக்கியமான திருப்பமாக அவரது இந்திய விஜயம் அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. இலங்கை ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு... Read more »

தமிழரின் தேசிய இனப் பிரச்சனையை சீனா குறுகிய நோக்கத்தில் பார்க்க கூடாது – சபா குகதாஸ்.

தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சனையை தற்போது இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு சீனா குறுகிய நோக்கத்தில் பார்க்கக் கூடாது என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட சீன... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம்  முல்லைத்தீவில்  வெள்ள நிவாரணம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துன் வற்றாப்பளை, முள்ளியவளை, கேப்பாப்பிலவு, ஐயனார் குடியிருப்பு, ரெட்பானா, விஸ்வமடு ஆகிய  கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட  165 குடும்பங்களுக்கு ரூபா  495,000  பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வற்றாப்பளையில் வைத்து நேற்று... Read more »