மரம் முறிந்து வீழ்ந்து இளம் தாய் மரணம்..!

குளியாப்பிட்டிய – மாதம்பே பிரதான வீதியில் சுதுவெல்ல பகுதியில் இன்று பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பே, கல்முருவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கல்முருவயிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய பங்களதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

LPL போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ்  அணியுடன் இணைந்து செயற்படும் பங்களதேஷ் பிரஜையான தம்மி ரஹுமான் என்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,... Read more »

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு!

இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்... Read more »

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் யுவதி மீது வாகனத்தால் மோதி உயிரைப் பறித்த இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் யுவதி மீது வாகனத்தால் மோதி உயிரைப் பறித்த இராணுவம் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில்... Read more »

ஈரான் அதிபர் உயிரிழப்பு

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன்... Read more »

பலமான கட்டமைப்பில் செயற்பட்ட விடுதலைப் புலிகள்

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம்.  இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள... Read more »

அதிகரிக்கும் காற்றின் வேகம்..! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய  காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென  எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல்... Read more »

கிழக்குப் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல் துறையின் அநாகரீக மற்றும் அடாவடியான செயற்பாடுகள் ஊடாக மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக்... Read more »

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். Read more »

காட்டுப்பகுதிக்குள் இ.போ.ச பஸ் சாரதி சடலமாக மீட்பு..!!

நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவன் சதுரிக  எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் இலங்கை... Read more »