நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை  மாவட்டம் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், 2025ஆம் ஆண்டு... Read more »

இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக இல்லங்கள் தாயார் செய்வதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. குறித்த விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை (28)  இடம்பெறவிருந்த நிலையில், இரவுவேளை பாடசாலை மைதானத்தின் அருகில் மூங்கில் மரங்களை வெட்டச்... Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல்களைப் பெற அனுமதி!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடுக்குத்  திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள... Read more »

பலத்த பாதுகாப்பில் தேவாலயங்கள்..!

மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. சிலுவைப்பாதையானது தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. அந்தோனியர் தேவாலயத்தின் அருட்தந்தை அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற சிலுவைப் பாதையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள்... Read more »

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி... Read more »

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி விஜயம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(28)இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

வீட்டில் தனிமையில் இருந்த பெண் படுகொலை

கடுவெல – கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில்... Read more »

​மொட்டுக் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட நாமல் தீவிர முயற்சி!

பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ச... Read more »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம்... Read more »

நாட்டில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும்... Read more »