சாலை கடற்பகுதியில் ஐவர் கடற்படையால் கைது.

வடமராட்சி கிழக்கு  சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட  கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 07.05.2024 இன்று மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  வேளை  இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில்... Read more »

ஒற்றையாட்சியை வலிந்து திணிக்காதீர்கள்” சர்வதேச சமூகத்திடம் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை!

ஒற்றையாட்சி நிராகரித்தமையால் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள, வடக்கின் மக்கள் பிரதிநிதி ஒருவர், முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடுவதன் நோக்கம் படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வதற்காக மாத்திரமல்ல எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ் தேசிய... Read more »

இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு... Read more »

அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது…!

அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் 06.05.2024 வரையான 24 மணி நேர பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் சுற்றி வளைப்பின் இவ்வாறு... Read more »

13 ம் திகதி ஆரம்பமாகவுள்ள தாழமுக்கம்…!

எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும் (இது இன்றைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலான கணிப்பாகும். இதில் சில மாற்றங்களும் நிகழலாம் என்பதனையும்... Read more »

விக்கி கூறும் 2ம், 3ம் வாக்குகள் அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் – மனோ கணேசன்!

விக்னேஸ்வரன் கூறும் தமிழ் வேட்பாளர் தெரிவு சிறந்தது எனவும் 2ம், 3ம் வாக்குகளானது அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று  இடம் பெற்ற தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் – மாவை!

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல... Read more »

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்திவதற்க்கு தமிழ் பொது  அமைப்பு பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் தீர்மானம்…!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர் குறித்த சிவில் சமூக குழுவின் முழுமையான தீர்மானம் வருமாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் தமிழ்... Read more »

முறிகண்டி பகுதியில் விபத்து – இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலி.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.   குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.  ... Read more »

மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியை வந்தடைந்தது.

மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கியமாதா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு அருட்தந்தை அல்பட் சேகர் தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் திருச்சொருப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மடுமாதா முடிசூடப்பட்டு 100வது... Read more »