மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பின் பல இடங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏராவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, நாவலடி, ஆகிய பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விநியோகம் செய்த இடங்களில் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எரிவாயு... Read more »

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மிக சிறப்பாக மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்துடன் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இணைந்த ஏற்பாடு செய்த சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா... Read more »

கதிகாமம் நோக்கிய பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோகம்.

முருகனின் படைவீடுகளில் ஒன்றாக கருதப்படும் கதிகாமம் நோக்கி யால காட்டின் ஊடாக செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரசபையினால் அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எதிர்வரும் 22ஆம் திகதி யால காட்டின் ஊடான பாதையாத்திரிகர்கள் செல்லும் வகையில் பாதை... Read more »

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு, காரைதீவு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது. விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தின் தலைவர்,... Read more »

மட்டு.அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவம்.

மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா ஆலய பிரதம குரு... Read more »

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் சமையல் எரிவாயு விநியோகம்.

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 12 பிரிவுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வினியோக அட்டையின் கீழ் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டது.... Read more »

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழப்பு . 

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.... Read more »

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு... Read more »

மட்டு. மகிழூர் குளக்கட்டு அன்னை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் அருள்மிகு குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு பெருவிழாவின் தீ மிதிப்பு நிகழ்வு நேற்றிரவு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தின் இவ்வருடத்திற்கான சடங்கு கந்த 2022.07.06 ஆம் திகதி ஆரம்பமாமாகியது. தொடற்சியாக 8 நாட்கள்... Read more »

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டுச்செல்ல முயன்ற 78பேர் கைது.

மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 78 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கிழக்கு கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல்களின் போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பலநாள்... Read more »