சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் 10 மீனவர்கள் கைது..!

சுமார் 200 கிலோ கிராம்  போதைப்பொருள் தொகையுடன் 02  மீன்பிடி படகுகள் இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். மேலும் கைது... Read more »

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ரி.ஐ.டி.விசாரணை…!

நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரான தீபச்செல்வன் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த்தேசியக் கொள்கைநிலைப்பட்ட அரசியல் தளத்தில் இயங்கும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளியான கவிஞர் தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின்... Read more »

புத்தாண்டை முன்னிட்டு சிறை கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்..!

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பார்வையிட வரும் நபர் வீட்டிலிருந்து கொண்டு... Read more »

போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்..!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழக்கின்றனர் என தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் கஞ்சா பாவனையை நாடியுள்ளதாகவும், கஞ்சா பாவனையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் எனவும், ஏறக்குறைய ஒரு இலட்சம்... Read more »

சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு!

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடப்பட்டிருந்தது.... Read more »

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிசார் எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை  மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா... Read more »

கொழும்பில் மூவர் கைது

கொழும்பு, மருதானை பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த டீ – 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது... Read more »

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு..!

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால்... Read more »

பெண் அரச உத்தியோகத்தரை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர்..!

அமைச்சு அதிகாரிகள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க, அரச உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் மனித வள மற்றும் நிர்வாக உதவியாளரான வீ.சே.சந்திரரட்ன என்ற பெண் உத்தியோகத்தர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்... Read more »

யாழில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை…!

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப்  குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு... Read more »