கடற்படையினரின் வாகனத்தில் மோதி பெண் உயிரிழப்பு..!

திருகோணமலை – தொரட்டியாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோரயாய பகுதியில் கடற்படையினர் பயணித்த வாகனத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. தோரயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். குருணாகலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த... Read more »

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய்; பஸ் கவிழ்ந்து விபத்து!

மொனராகலை – வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் கஞ்சா கலந்த பீடியுடன் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதித்த போது கஞ்சா கலந்த... Read more »

வட்டுக்கோட்டை பவித்திரன் கொலை விவகாரம் – ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம்!

வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்பவரது கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் இன்றையதினம் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி வன்முறை கும்பல் ஒன்றினால் பொன்னாலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் வைத்து கடத்தப்பட்டு... Read more »

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த “வாழைத்தோட்டம் தினுக”  என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய என கூறப்படும் சந்தேகநபரொருவர் பொரல்லை பிரதேசத்தில் வைத்து கைது... Read more »

ரூ.10 கோடி பெறுமதியான தங்க நகைகள் சிக்கின

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளுடன் டுபாயிலிருந்து வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க கண்காணிப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனர் என  சுங்க ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட சுங்க பணிப்பாளர்  சிவலி அருங்கொட தெரிவித்தார். மதுபான... Read more »

அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலை இடம்பெற்ற துயரம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்   இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானொன்று அதே திசையில் பயணித்த... Read more »

யாழில் சிக்கிய விபச்சார விடுதி

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று இன்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதாவது யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதியாக செயற்பட்ட வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகளும், 3 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இதன்போது... Read more »

தொழுகை செய்த இலங்கை உள்ளிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களால் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »

மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் மாத்தறை – ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய ஆசிரியை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,... Read more »