பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள்... Read more »

கொழும்பில் நிறுவப்பட்ட CCTV கேமரா மூலம் பலர் அடையாளம்

கொழும்பில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட CCTV கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் CCTV மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து... Read more »

மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.

பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். கழுத்தை நெரித்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர், சொரனாதோட்டை, கெடிகஹதன்ன, கொஹோவிலவில் வசிக்கும் தினேஷ் ரத்நாயக்க என அடையாளம்... Read more »

மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

லியனாடோ டாவின்சியின் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண்கள் இருவர் Soup திரவ உணவை விசிறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி... Read more »

கடற்கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்-கடத்தப்பட்ட மீனவர்கள் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு மற்றும் அதில் பயணம்... Read more »

11மாத சிசுவை அவசர சிகிச்சை பிரிவில் கைவிட்டுச் சென்ற பெற்றோரை கைதுசெய்ய உத்தரவு

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 11 நாட்களே ஆன சிசு உயிரிழந்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அடையாளத்தை உறுதிப்படுத்த பெற்றோரைக் கண்டுபிடித்து DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு... Read more »

மாத்தளன் கடற்பகுதியில் பரபரப்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே... Read more »

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம் மூன்றாம் இடத்தில் பாராளுமன்றமும் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. Read more »

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை.!

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேயிலை கொழுந்து... Read more »

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க – 109 க்கு அழைக்கவும்!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை... Read more »