பனிப்போரில் தமிழ் மக்கள் யார் பக்கம்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

காஸா யுத்தம்  20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கண்டு நடுங்குவது ஏன்? பொலிஸ்மா அதிபரிடம் சுமந்திரன் எழுத்துமூலம் கேள்வி.. |

வன்முறை மற்றும் இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அம்பிட்டிய சுமண தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பில் இன்றையதினம் மேற்படி... Read more »

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் படைப்பாளிகளைக் கௌரவிக்கும் விருதுவிழா – 2023

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகளை கௌரவிக்கும்  விருதுவிழா – 2023″ எதிர்வரும் ஒக்டோபர் 28ம்  திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விருதுவிழா-2023-Programme sheet-v1[1] கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம், எதிர்வரும்... Read more »

ஹர்த்தால் நாளில் நான்கு பேர் 2500 ரூபாவிற்காக பாராளுமன்றம் வந்தார்கள் – அங்கயன் எம்.பி சாடல்.

வடக்கு கிழக்கு ஹர்த்தாலை அறிவித்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் ஹர்தாலுக்கு செல்லாமல் 2ஆயிரத்து 500 ரூபாவுக்காக பாராளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

இஸ்ரேல் – காஸா யுத்தம் ! உலகிற்கு புதிய வெளிச்சத்தை தருமா? சி.அ. யோதிலிங்கம். 

காஸா – இஸ்ரேல் யுத்தம் காஸா மருத்துவமனை மீதான  தாக்குதல் மூலம் 500 பேர் வரை கொல்லப்பட்டதோடு உலக முஸ்லீம் நாடுகளின் உணர்வு பூர்வமான பிரச்சினையாக  மாறியுள்ளது. முஸ்லீம் உலகம் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது எனலாம். இஸ்ரேல் என்ன தான் சத்தியம் பண்ணி தான் தாக்கவில்லை... Read more »

ஒரே குடையில் திரண்டு முழு அடைப்பை வெற்றியடையச் செய்ய ஒத்துழைக்கவேண்டும்….! சரவணபவன்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. மக்கள் மயப்படுத்திய போராட்டங்களையே முன்னெடுக்கவேண்டும். எதிர்காலத்தில் பொது அமைப்புக்கள் உள்பட அனைத்துத் தரப்புக்களுடன் கலந்தாலோசித்து முழு அடைப்புப் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிக்கவேண்டும். எப்படியிருப்பினும் இம்முறை முழு அடைப்பின்... Read more »

பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணியுங்கள் – பெற்றோர்கள் மாணவர்களிடம் தமிழ் கட்சிகள் வேண்டுகோள்!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை... Read more »

முஸ்லிம் மக்களும் ஆதரவு…..!

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட... Read more »

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல்….!(video)

20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று (15.10.2023 ) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது ஹர்தால் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களை சந்திப்பது, இந்தியப் பிரதமருக்கான கடிதம்... Read more »

மயிலத்தமடு போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர் – அப் பகுதியில் பதற்றம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »