வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி... Read more »
ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி பலவந்தமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »
நீர்கொழும்பு பிரதேசத்தில் கனரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 13 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது. சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த... Read more »
இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது. தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் அவர்களிடம்... Read more »
கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண்பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உட்பட மூவர் நேற்று... Read more »
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று நாள் தொழில் ஆசிர்வாதத்துடன் கடலில் இறக்கப்பட்டது வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த செல்வராசா-சுதர்சன் இந்த வருடத்திற்கான நாள் தொழிலை கட்டைக்காடு மக்கள் சார்பாக முதன் முதலாக ஆரம்பித்துவைத்தார். பங்குத்தந்தை அமல்ராஜ்... Read more »
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை – கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன. – 2025 க்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய அறிவுறுத்தல் – காணாமல் போனோரை தேடும் பணிகள்... Read more »
வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு பலமணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தலில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் வெளிப்படையாக ஆதாரங்களோடு செய்தியை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் அவதூறு என முறைப்பாடு... Read more »