தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ரி.ஐ.டி.விசாரணை…!

நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரான தீபச்செல்வன் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த்தேசியக் கொள்கைநிலைப்பட்ட அரசியல் தளத்தில் இயங்கும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளியான கவிஞர் தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின்... Read more »

வாய்க்காலில் மிதந்த குடும்பஸ்தரின் சடலம்…!

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் 37 வயது இரண்டு பிள்ளைகளின்... Read more »

புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்புப் பரிசோதனைகள்.

புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்புப் பரிசோதனைகள். தற்போதைய புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரிப்பகுதியில் விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகள் பூநகரி பொதுசுகாதார பரிசோதகர் குழாமினால் மேற்கொள்ளப்பட்டது. பூநகரி பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் பூநகரி,ஜெயபுரம்,முழங்காவில் பிரிவுகளின்... Read more »

இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு

நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது தென்னந் தோப்பு வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வீட்டில் உள்ள பயன் தரும் வாழை, பூ... Read more »

பூநகரி வாடியடி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் பூநகரி வாடியடிச் சத்தியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் மோதியுள்ளது. விபத்தில்... Read more »

கிளிநொச்சியில் நனோ நீர் சுத்திகரிப்பு மையம் திறந்து வைத்த அமைச்சர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க, கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க... Read more »

சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு

சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குட்பட்ட கிளி/மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06)காலை 10மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் சர்வதேச... Read more »

கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் வைத்தே சோதனை மேற்கொண்ட... Read more »

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம்-திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பகுதியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் ஒன்று இன்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்த்திற்குட்பட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பிரதேசத்தில் இன்று தேசிய நீரியல் வள ஆராய்ச்சி... Read more »