இனறு முதல் முகக் கவசத்திலிருந்து விடுதலை!

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வியாழக்கிழமை விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று நடைமுறை... Read more »

காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு, 42 வயது காதலன் கைது..!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை அழைத்துச் சென்ற 42 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம்... Read more »

நெருக்கடித் தீர்வில் தமிழ்த்தரப்பு ஒரு தரப்பாக பங்குபற்ற வேண்டும்……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர்.... Read more »

ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளில் வாழ்வாதார நிதியுதவி வழங்கல்

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் அரசினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் இரண்டு சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகளின் சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கப்பட்ட நிவாரண... Read more »

மட்டக்களப்பில் சைக்கிளில் சென்று கடமையில் ஈடுபடும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் இன்மை போன்ற பிரச்சினைகளினால் மக்களுக்கு அத்தியாயமாக சேவையாற்றும் மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் தமது கடமைகளை சைக்கிளில் சென்று ஆற்றிவருகின்றனர். கடமை நேரத்திற்கு மேலதிக நேரம் பணி புரியும் இவர்களுக்குமான மேலதிக கொடுப்பனவையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன்... Read more »

தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு.

சமூகமட்ட அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் மே 18 தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது மட்டக்களப்பு காந்தி... Read more »

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஆத்மாக்களின் சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் செயலாளர் சதீஷனின்... Read more »

இந்திய அரசு சதித்திட்டங்களை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது…!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நாளிதழான த ஹிந்து நாளிதழில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக வெளியிட்ட செய்தியானது தமிழ் மக்களிடையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக... Read more »

மட்டு.தரிசனம் விழிப்புலணற்றோர் பாடசாலையின் ஆண்டு நிறைவு விழா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி நொச்சிமுனை பகுதியில் 1992 ஆம் ஆண்டு விழிப்புணர்வற்ற பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் 30 வது ஆண்டு விழாவாக முத்து விழா நேற்று  கொண்டாடப்பட்டது தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் நிர்வாக குழு தலைவர்... Read more »

கிழக்கு பல்கலைக்கழக விவகாரம்! பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ம் திகதி அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்துள்ளார். சுவாமி விபுலானந்தா... Read more »