தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்…..! தம்பிராசா செல்வராணி.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்.  இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கிப் பார்க்காமல் இருக்கின்றன என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்... Read more »

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகள்…!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இலங்கை தமிழர்கள் 6 (1 ஆண் , 2 பெண்கள் 3, குழந்தைகள்) பேரை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர்... Read more »

இந்திய வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான்.

அண்டை நாடான இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதால் அதை பாராட்ட விரும்புகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென இந்தியாவை பாராட்டியுள்ளார். கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இம்ரான் கான் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், அண்டை... Read more »

திருகோணமலையில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்த போராட்டம்…!

மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் தீப்பந்தம் ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கண்டி வீதி தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் இன்று இரவு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின் பாவனையாளர்களின் உரிமைக்கு... Read more »

கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்….!

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்று பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம்... Read more »

கொழும்புத்துறையில் அளவுக்கதிகமான போதைப் பாவனையால் இளைஞன் மரணம்!

அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப் பொருளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 4 வருடங்களாக போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞன் பணம் கேட்பது மற்றும் திருட்டு... Read more »

மட்டு.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி…!

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 88 வீதமானமாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்.செல்வராஜா தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதில் உ.ஜீரோமி -155 புள்ளிகள்,... Read more »

சத்துணவை உட்கொண்ட 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவை உட்கொண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளதுடன் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  குறித்த சம்பவம் மட்டக்களப்பு – வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அ.த.க பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு... Read more »

செங்கலடி கலாசார மத்திய நிலையம் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் திறந்து வைப்பு

ஜனாதிபதியின் “நாட்டை கட்டியெழுப்புவதற்கான சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்தித் திட்டங்களை யதார்த்தமாக்கும் பொருட்டு பொது நிதியின் மூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட ஏறாவூர் – செங்கலடி கலாசார மத்திய நிலையத்தை தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சர்... Read more »

மண்முனை தென் எருவில் பற்று கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு….!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் பற்றிமா வீதி 12 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச... Read more »