யாழில் காணி விற்ற 1 கோடி 8 இலட்சம் ரூபா பணம் வீதியில் வைத்து கொள்ளை!

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 7 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றது.... Read more »

தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது  அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவிக்காமல் கடந்த கால ஆட்சியாளர் போன்று அரசியல் பேசுவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே... Read more »

நெடுந்தீவில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று 01/10/2024 சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. கல்லூரி அதிபர் தலைமையில் பிள்ளைகளைப் பாதுகாப்போம், சமமாக மதிப்போம், எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடைபெற்றன. கல்லூரிக்கு அருகில் உள்ள பிரதான வீதியூடாக... Read more »

கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கான  பேருந்து சேவை ஆரம்பம்…!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் ,நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில்  கீரிமலையில்... Read more »

மதுபான சாலை விவகாரம், உண்மையை ஒத்துக்கொண்ட விக்கினேஸ்வரன்….!

என்னிடம்  உதவி கேட்க வருபவர்களுக்கு  சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை நான் வழங்கியது உண்மை தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.... Read more »

யாழில் கணவாய் மீன் பிடிக்க கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில், கணவாய் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் நேற்று 28/09/2024 பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உட்பட... Read more »

யாழில் கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்!

கடந்த வியாழக்கிழமை  அதிகாலை பென்னாலை கிருஷ்ணன் கோயிலுக்கு பின்புறம் உள்ள புதர் ஒன்றினுள் வைத்து, 5மாதங்கள் கர்ப்பிணியான பசுமாட்டை சிலர் இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். பொன்னாலை மேற்கை சேர்ந்த இருவர் இந்த பசுமாட்டினை வெட்டியாக அறிய முடிகிறது. இதுகுறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,... Read more »

யாழில் மனவிரக்தியில் பிரான்ஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிர்மாய்த்துள்ளளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது... Read more »

நிஜமான நல்லிணக்கமே,  நிலையான நல்லாட்சி – குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு!

இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் துணிகரமான தீர்மானம் ஆகும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »

நாட்டை தூய்மையாக்குவோம் செயற்றிட்டம் வடமராட்சியில் முன்னெடுப்பு…!

லயன்ஸ்  கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும்  தொனிப்பொருளிலான கடற்கரையை  சுத்தமாக்கும் சிரமதானப்பணி நேற்று 28/09/2024 வடமராட்சி பருத்தித்துறை  தும்பளை கடற்கரையில் வட பிராந்திய  தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலமையில் காலை 7:30 மணிமுதல் இடம் பெற்றது. யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ்  கழகங்கள்... Read more »