தமிழ் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.கட்டமைப்பின்  அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர். Read more »

தமிழ் மக்கள் ஒருமித்த குரலாக ஒன்றுதிரண்டு சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும்..! வேந்தன் கேரிக்கை.

தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று…!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று  காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது. குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலமையில் மற்றும் சிவாச்சாரியார் இணைந்து கிரியைகளை நடாத்தவுள்ளனர். இன்று  ஆரம்பமாகும்... Read more »

பொன் சிவகுமார் அவர்களுக்கு சுடரேற்றி பொது வேட்பாளருக்கான பரப்புரை…!

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை நேற்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.... Read more »

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள்….!

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததினம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிஆண்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில்... Read more »

அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இன்று அகவை எழுபத்தைந்து..!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு  இன்று 31.08.2024 சனிக்கிழமை 75 ஆவது பிறந்தநாள். அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினரும், முருகபக்தர்களும் இணைந்து சுவாமிகளின் பவளவிழாவை காலை 8.30 மணி தொடக்கம் கொண்டாடுவதுடன் அறம்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்.. |

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று 30/08/2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024  நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில்... Read more »

ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவு, நான் ரணிலின் ஆள் அல்ல – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »

தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம் – தமிழ்த் தேசியத்  தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை 

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா... Read more »